Blogger news

Monday, 24 December 2012

நட்சத்திரப்படி குழந்தை பெயர்கள்

நட்சத்திரப்படி குழந்தை பெயர்கள்
நட்சத்திரம்தமிழ் எழுத்துக்கள்English Letter
அசுபதிசு, சே, சோ, லCHU,CHEY,CHO,LA
பரணிலி, லு, லே, லோLI,LU,LEY,LO
கிருத்திகைஅ, இ, உ, எAO,Ee,UO,A
ரோகிணிஒ, வ, வி, வுO,VA,VEE,VOO
மிருகசீரிஷம்வே, வோ, கா, கிVAY,VO,KAA,KE
திருவாதிரைகு, க, ச, ஞKOO,GHAA,JNA,CHA
புனர்பூசம்கே, கோ, ஹ, ஹிKAY,KO,HAA,HEE
பூசம்ஹூ, ஹே, ஹோ, டHOO,HAY,HO,DAA
ஆயில்பம்டி, டு, டே, டோDEE,DOO,DAY,DO
மகம்ம, மி, மு, மெMAA,MEE,MOO,MAY
பூரம்மோ, ட, டி, டுMO,TAA,TEE,TOO
உத்திரம்டே, டோ, ப, பிTAY,TO,PAA,PEE
அஸ்தம்பூ, ஷ, ந, டPU,SHAA,NAA,THA
சித்திரைபே, போ, ர, ரிPAY,PO,RAA,REE
சுவாதிரு, ரே, ரோ, தRU,RAY,RO,TAA
விசாகம்தி, து, தே, தோTHEE,THOO,TAHY,THO
அனுஷம்ந, நி, நு, நேNA,NEE,NOO,NAY
கேட்டைநோ, ய, இ, பூNO,YAA,YEE,YOO
மூலம்யே, யோ, ப, பிYAY,YO,BAA,BEE
பூராடம்பூ, த, ப, டாBU,DHAA,BHA,DHA
உத்திராடம்பே, போ, ஜ, ஜிBAY,BO,JAA,JEE
திருவோணம்ஜூ, ஜே, ஜோ, காJU,JAY,JO,GHA
அவிட்டம்க, கீ, கு, கூGAA,GEE,GOO,GAY
சதயம்கோ, ஸ, ஸீ, ஸூGO,SAA,SEE,SOO
பூரட்டாதிஸே, ஸோ, தா, தீSAY,SO,DAA,DEE
உத்திரட்டாதிது, ச, ஸ்ரீ, ஞDHU,THA,SA,GHEE
ரேவதிதே , தோ, ச, சிDE,DO,CHAA,CHEE
Wednesday, 26 September 2012

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான படிவங்கள்

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அவற்றை எவ்வாறு பெறுவது என்பதற்கான வழிமுறைகள் தெரிவதில்லை. மேலும் அவற்றை பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதும் தெரிவதில்லை. 

அவர்களுக்காக...... 

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான படிவங்கள் பற்றிய விபரம்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வருவாய்த்துறை)

1. சாதிச் சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவம்.

2. வாரிசுரிமைச் சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவம்.

3. வருமானச் சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவம்.

4. பிறப்பிடச் சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவம்.

5. இருப்பிடச் சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவம்.

6. புல எல்லை அளந்து அத்து காட்டக்கோருவதற்கான விண்ணப்பம்.

7. பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்பப்படிவம் சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்.

8. ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவித்தொகைக்கான மனு.

9. நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெறுவதற்கான மனு.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

1.  குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பம்.

2. மண்ணெண்ணெய் மொத்த விற்பனையாளர் உரிமத்திற்கான விண்ணப்பப்படிவம். 

3. மண்ணெண்ணெய் சில்லறை விற்பனையாளராகப் பதிவு செய்து கொள்வதற்கு அல்லது பதிவினைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்.

4.  புதுப்பித்தல் உட்பட மொத்த விற்பனை/சில்லறை விற்பனைக்குரிய உரிமம்
பெறுவதற்கான விண்ணப்பம் படிவம்-அ  (அட்டவணை).

5.  மொத்த விற்பனை/சில்லறை விற்பனை உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் படிவம்.

6.  மொத்த விற்பனை/சில்லறை விற்பனை உரிமத்தினைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் படிவம். 

7. எப்பொருளும் வேண்டாதோர் இருப்பிட ஆதார குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பம்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

1. அரசாங்க மாணவரில்லத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான விண்ணப்பம்.

2. உதவித் தொகை விண்ணப்பம் புதியது.

3. உதவித் தொகை விண்ணப்பம் புதுப்பித்தல்.

சமூக நலத்துறை

1. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்.

2. மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்.

3. இதர விண்ணப்பப்படிவங்கள்.

பொதுப்பணித் துறை

விவசாய கிணற்றினை செயற்கை முறையில் மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மேலாண்மை செய்வதற்கான கட்டிட, சார்பு பணி செய்வதற்கான பண உதவி வேண்டுதல் மற்றும் செயல்படுத்த உறுதிமொழி படிவம்

நிலத்தடி நீர் இருப்பிட ஆய்வு வேண்டிய விண்ணப்பம்


மேலுள்ள அனைத்து விண்ணப்ப படிவங்களையும் பெறுவதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

http://www.tn.gov.in/tamiltngov/appforms/default.htm

குறிப்பு : தமிழில் டிஸ்பிளே தெரியவில்லை என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தமிழ் பாண்ட்ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும்.

http://www.tn.gov.in/tamiltngov/misc/fontdload.htm

Tuesday, 28 August 2012


உடலுக்கு வலிமையையும், இரத்த சோகையையும் குணப்படுத்தும் உலர் திராட்சை
 உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன.

இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

1. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

2. மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

3. உலர் திராட்சை பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.

4. இதில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

5. குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடகாத்திரமாக வளரும்.

6. தொண்டைக்கட்டு பிரச்சனை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் நிவாரணம் பெறலாம்.

7. மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

8. தினமும் படுக்கைகக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.  

உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு!

1. சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சையைக்  கொண்டு செய்யப்படும் மருந்துகைள தவிர்ப்பது நல்லது.
2. உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு.
3. அதைனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.
4. குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும் போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னேரேக் கொடுக்க வேண்டும்.

Wednesday, 22 August 2012

ஊக்கமருந்தாகும் உலர் திராட்சைகள்

விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்தாகும் உலர் திராட்சைகள்

உலர் திராட்சைகள் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் மத்தியில் சாப்பிடக்கூடிய ஊக்க உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தேவை உடல் வலிமை. அதிலும் குறிப்பாக தொலைதூர ஓட்டப்பந்தயங்கள் போன்றவற்றில் எண்டியூரன்ஸ் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல்வலிமை மிக மிக அவசியம்.

இப்படியான தாக்குப்பிடிக்கத் தக்க உடல்வலிமையை பெறுவதற்காக போட்டியாளர்கள் பலவகையான வழிமுறைகளை கடைபிடிப்பார்கள். கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் செயற்கையான இனிப்பு மிட்டாய்களை மெல்வது போட்டியாளர்கள் பலரும் செய்யும் விடயம்.

ஆனால் அப்படியான செயற்கை இனிப்புக்களை மெல்வதை விட, இயற்கையான முறையிலேயே இப்படியான தாக்குப்பிடிக்கத்தக்க வலிமையை பெறமுடியும் என்று கலிபோர்னிய பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது உலர் திராட்சைப்பழங்களை மென்று சாப்பிடுவதன் மூலம் விளயாட்டுப்போட்டிகளில் தேவைப்படும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல் வலிமையை பெற முடியும் என்று இவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதற்காக இவர்கள் செய்த ஆய்வுக்காக ஐந்து கிலோமீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தை நடத்தினார்கள். இதில் கலந்துகொண்டவர்களில் சிலர் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு ஓடினார்கள். வேறு சிலர் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் இனிப்புகளை சாப்பிட்டு ஓடினார்கள். மற்றவர்கள் உலர் திராட்சைப்பழங்களை சாப்பிட்டு விட்டு ஓடினார்கள்.

போட்டியின் இறுதியில் வெறும் தண்ணீர் குடித்துவிட்டு ஓடியவர்களை விட, இனிப்புகளையும் உலர் திராட்சைகளையும் சாப்பிட்டுவிட்டு ஓடியவர்கள் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை ஒரு நிமிட நேரம் முன்னதாக ஓடி முடித்தார்கள்.
இதிலிருந்து, கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் இனிப்புக்களுக்கு சம்மாக உலர் திராட்சைகளும் நீடிக்கத்தக்க உடல் வலிமையை தருவதாக தெரிவித்திருக்கும் ஆய்வாளர்கள், உலர் திராட்சைகள், இயற்கையான ஊக்கசக்தியாக விளங்குவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

Friday, 27 July 2012

கூகுளின் புதிய இன்டர்நெட் சேவை!

கூகுளின் புதிய இன்டர்நெட் சேவை! சூப்பர் வேகத்தில்


Google vs. To Offer TV Service In Kansas City vs. Super High Speed Internet 100X Faster

அதி வேகத்தில் செயல்படும் புதிய இணையதள சேவையை (இன்டர்நெட் சேவையை) அறிமுகம் செய்கிறது கூகுள் நிறுவனம்.
இந்த புதிய இணையதள சேவையின் வேகம் குறித்த விஷயங்களை சோதனை செய்து பார்க்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் நகர குடியிருப்பு பகுதிகளில் வரும் செப்டம்பர் மாதம் இந்த வசதி வழங்கப்படும்.
மற்ற இன்டர்நெட் வசதிகளை விடவும், கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய கூகுள் ஃபைபர் இன்டர்நெட் சேவை 100 மடங்கு வேகம் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த இணையதள சேவையின் வேகம் அல்ட்ரா-ஹை ஸ்பீட் என்று சொல்லப்படுகிறது. இதனால் நிச்சயம் பல மடங்கு வேகத்தில், இந்த இன்டர்நெட் சேவை இயங்கும் என்று கூறலாம்.
கூகுள் ஃபைபர் இணையதள சேவை ஒரு நொடிக்கு ஒரு ஜிகாபைட் வேகம் கொண்டு இயங்கும். இன்டர்நெட் சேவையின் மூலம் மக்கள் அதிக தகவல்களை பெற முடியும் என்பதைவிட, அந்த இன்டர்நெட் சேவை சிறந்த வேகத்தினை பெற முடியவில்லை என்பது மக்களின் பெரிய குற்றச்சாட்டாகவும் இருக்கிறது.
இந்நிலையில் அதி வேகம் கொண்ட இணையதள சேவையினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்கிறதென்றால், நிச்சயம் இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, 9 July 2012

டி.என்.பி.எஸ்.சி (TNPSC) தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தற்போது டி.என்.பி.எஸ்.சி. விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அது எப்படி என்பதை பார்ப்போம்.

TNPSC இணையத்தில் பதிவதற்கு முன்பு நாம் தயாராக வைத்திருக்க வேண்டியவை :

  1. சமீபத்திய புகைப்படம் மற்றும் கையெழுத்தினை ஸ்கேன் செய்து சீடியிலோ அல்லது பெண் டிரைவ்விலோ வைத்திருக்கவும். புகைப்படம் 50kb (3.5 cm x 4.5 cm, 20 kb –50 kb)அளவுக்கு மிகாமலும் கையெழுத்து 20kb (3.5 cm x 1.5 cm, 10 kb –20 kb)அளவுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.
  2. சாதிச் சான்றிதழ் மற்றும் மற்ற படிப்புகளின் மதிப்பெண் பட்டியலை மறக்காமல் கையில் வைத்துக் கொள்ளவும்.
  3. மின்னஞ்சல் (இமெயில்) முகவரி மற்றும் செல்போன் நம்பர் அவசியம் தேவை.
இப்போது TNPSC யின் இனணய தளமான http://tnpscexams.net என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

அங்கே இடது புறத்தில் One Time Registration என்று குறிப்பிடப்பட்டுள்ளதை க்ளிக்  செய்யவும்.

TNPSC One Time Registration செய்வது எப்படி?

முகப்பு பக்கத்தில் காணப்படும் One Time Registration பொத்தானை அழுத்தவும். உங்களுக்கு பதிவு செய்ய வேண்டிய விண்ணப்பத்தைக் காட்டும்.

அப்படிவத்தில் பெயர், தந்தை பெயர், தாயார் பெயர், கணவர் அல்லது மனைவி பெயர், பிறந்த இடம், தந்தையார் பிறந்த இடம், தாய்மொழி, இனம், மதம், சாதி, சாதி உட்பிரிவு, சாதி சான்றிதழின் எண், சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி, யார் வழங்கினார்கள் என்ற விவரம், எந்த வருடம் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு படித்தீர்கள் என்ற விபரங்களும் கேட்கப்பட்டு இருக்கும்.

அவற்றையும் பொறுமையாக பிழை இன்றி பதிவு செய்யவும். பதிவு செய்து அதன் வாயிலாக கிடைக்கும் சளானை பூர்த்தி செய்து அருகாமையில் உள்ள அஞ்சலகத்திலோ, இந்தியன் வங்கி கிளைகளிலோ அல்லது இணைய வழி வங்கி சேவை (டெபிட் கார்டு) மூலமாகவோ பதிவுக்கான தொகையினை குறித்த நேரத்திற்குள் செலுத்திட வேண்டும்.

பதிவு செய்த உடன் உங்களது மின்னஞ்சல் மற்றும் அலைபேசிக்கு உங்களுக்கான ரிஜிஸ்டர் எண் மற்றும் பாஸ்வேர்ட் கிடைக்கப்பெறும். இந்த எண்ணையும் பாஸ்வேர்டையும் மறக்காமல் குறித்து வைத்து கொள்ளவும்.

இந்த பதிவானது 5 வருடங்கள் செல்லுபடியாகும். இனி நீங்கள் தமிழக தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் பொது உங்களது நிலையான எண்ணை கொண்டு எளிமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்திடலாம். அதோடு ஒவ்வொரு முறையும் நீங்கள் விண்ணப்பதுக்கான கட்டணத்தை செலுத்த தேவையில்லை. ஆனால் ஒவ்வொருமுறையும் அந்ததந்த தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தித்தான் ஆக வேண்டும்.

TNPSC தேர்வுக்கான விண்ணப்பத்தை நிரப்புவது எப்படி :

மேற்குறிப்பிட்ட விண்ணப்பத்தை போலவேதான் இந்த விண்ணப்பத்தையும் நிரப்ப வேண்டும். விண்ணப்பத்தின் ஆரம்பத்திலேயே one time registration செய்திருக்கிறீர்களா என்று கேட்கும் ஆம் என்று டிக் செய்யவும். அதன் பிறகு மேற்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்தது போல் உங்களது விபரங்களை ஒவ்வொன்றாக இதில் பூர்த்தி செய்யவும். அந்த விண்ணப்பத்தில் கேட்டிருந்த விபரங்களை விட இங்கே நிறைய விபரங்களை பூர்த்தி செய்யவேண்டும். உதாரணமாக நீங்கள் அரசியல் கட்சியை சேர்ந்து ஏதேனும் போராட்டத்தில் கலந்து கொண்டீர்களா? உங்கள் மீது ஏதேனும் வழக்குள்ளதா? இந்த தேர்வை எத்தனையாவது முறை எழுதுகிறீர்கள் போன்ற விபரங்களும் கேட்கப்பட்டிருக்கும். நீங்கள் இரண்டாவது முறையாக இந்த தேர்வை எழுதுகிறீர்கள் என்றால் உங்களது முந்தைய தேர்வின் பதிவெண்ணும் தேர்வு எழுதிய வருடமும் குறிப்பிடப் படவேண்டும். 

ஏற்கனவே one time registration நீங்கள் செய்திருப்பதால் இந்த விண்ணப்பத்தை நிரப்புவதில் அதிக சிரமம் இருக்காது. அனைத்தையும் சரியாக நிரப்பி  submit செய்யவும்.

பிறகு தேர்வாணையம் குறிப்பிடும் நாளில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு தேர்வுக்கு செல்லலாம். அவ்வளவுதான்.

Saturday, 7 July 2012

Friday, 29 June 2012

டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி?


டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான முதற்படியே எல்எல்ஆர் என்று கூறப்படும் பழகுனர் உரிமம் பெறுவதுதான்

பழகுனர் உரிமத்துக்கு (எல்எல்ஆர்) விண்ணப்பிப்பது எப்படி?

எல்எல்ஆர் பெறுவதற்கு விண்ணப்பதாரர் 16 முதல் 18 வயதுடையோர் கியர் இல்லாத 50 சிசிக்கும் குறைவான திறன் கொண்ட மொபட் ஓட்டுவதற்கு மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

18 வயதுக்கு மேற்பட்டோர் கியர் கொண்ட அனைத்து இருசக்கர மற்றும் இலகு ரக நான்கு சக்கர வாகனங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதைத்தொடர்ந்து, 20 வயது பூர்த்தியடைந்தோர் கனரக வாகனங்களுக்கான லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க முடியும்.