Blogger news

Showing posts with label பயனுள்ள தகவல்கள். Show all posts
Showing posts with label பயனுள்ள தகவல்கள். Show all posts

Friday, 27 July 2012

கூகுளின் புதிய இன்டர்நெட் சேவை!

கூகுளின் புதிய இன்டர்நெட் சேவை! சூப்பர் வேகத்தில்


Google vs. To Offer TV Service In Kansas City vs. Super High Speed Internet 100X Faster

அதி வேகத்தில் செயல்படும் புதிய இணையதள சேவையை (இன்டர்நெட் சேவையை) அறிமுகம் செய்கிறது கூகுள் நிறுவனம்.
இந்த புதிய இணையதள சேவையின் வேகம் குறித்த விஷயங்களை சோதனை செய்து பார்க்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் நகர குடியிருப்பு பகுதிகளில் வரும் செப்டம்பர் மாதம் இந்த வசதி வழங்கப்படும்.
மற்ற இன்டர்நெட் வசதிகளை விடவும், கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய கூகுள் ஃபைபர் இன்டர்நெட் சேவை 100 மடங்கு வேகம் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த இணையதள சேவையின் வேகம் அல்ட்ரா-ஹை ஸ்பீட் என்று சொல்லப்படுகிறது. இதனால் நிச்சயம் பல மடங்கு வேகத்தில், இந்த இன்டர்நெட் சேவை இயங்கும் என்று கூறலாம்.
கூகுள் ஃபைபர் இணையதள சேவை ஒரு நொடிக்கு ஒரு ஜிகாபைட் வேகம் கொண்டு இயங்கும். இன்டர்நெட் சேவையின் மூலம் மக்கள் அதிக தகவல்களை பெற முடியும் என்பதைவிட, அந்த இன்டர்நெட் சேவை சிறந்த வேகத்தினை பெற முடியவில்லை என்பது மக்களின் பெரிய குற்றச்சாட்டாகவும் இருக்கிறது.
இந்நிலையில் அதி வேகம் கொண்ட இணையதள சேவையினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்கிறதென்றால், நிச்சயம் இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, 9 July 2012

டி.என்.பி.எஸ்.சி (TNPSC) தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தற்போது டி.என்.பி.எஸ்.சி. விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அது எப்படி என்பதை பார்ப்போம்.

TNPSC இணையத்தில் பதிவதற்கு முன்பு நாம் தயாராக வைத்திருக்க வேண்டியவை :

  1. சமீபத்திய புகைப்படம் மற்றும் கையெழுத்தினை ஸ்கேன் செய்து சீடியிலோ அல்லது பெண் டிரைவ்விலோ வைத்திருக்கவும். புகைப்படம் 50kb (3.5 cm x 4.5 cm, 20 kb –50 kb)அளவுக்கு மிகாமலும் கையெழுத்து 20kb (3.5 cm x 1.5 cm, 10 kb –20 kb)அளவுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.
  2. சாதிச் சான்றிதழ் மற்றும் மற்ற படிப்புகளின் மதிப்பெண் பட்டியலை மறக்காமல் கையில் வைத்துக் கொள்ளவும்.
  3. மின்னஞ்சல் (இமெயில்) முகவரி மற்றும் செல்போன் நம்பர் அவசியம் தேவை.
இப்போது TNPSC யின் இனணய தளமான http://tnpscexams.net என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

அங்கே இடது புறத்தில் One Time Registration என்று குறிப்பிடப்பட்டுள்ளதை க்ளிக்  செய்யவும்.

TNPSC One Time Registration செய்வது எப்படி?

முகப்பு பக்கத்தில் காணப்படும் One Time Registration பொத்தானை அழுத்தவும். உங்களுக்கு பதிவு செய்ய வேண்டிய விண்ணப்பத்தைக் காட்டும்.

அப்படிவத்தில் பெயர், தந்தை பெயர், தாயார் பெயர், கணவர் அல்லது மனைவி பெயர், பிறந்த இடம், தந்தையார் பிறந்த இடம், தாய்மொழி, இனம், மதம், சாதி, சாதி உட்பிரிவு, சாதி சான்றிதழின் எண், சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி, யார் வழங்கினார்கள் என்ற விவரம், எந்த வருடம் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு படித்தீர்கள் என்ற விபரங்களும் கேட்கப்பட்டு இருக்கும்.

அவற்றையும் பொறுமையாக பிழை இன்றி பதிவு செய்யவும். பதிவு செய்து அதன் வாயிலாக கிடைக்கும் சளானை பூர்த்தி செய்து அருகாமையில் உள்ள அஞ்சலகத்திலோ, இந்தியன் வங்கி கிளைகளிலோ அல்லது இணைய வழி வங்கி சேவை (டெபிட் கார்டு) மூலமாகவோ பதிவுக்கான தொகையினை குறித்த நேரத்திற்குள் செலுத்திட வேண்டும்.

பதிவு செய்த உடன் உங்களது மின்னஞ்சல் மற்றும் அலைபேசிக்கு உங்களுக்கான ரிஜிஸ்டர் எண் மற்றும் பாஸ்வேர்ட் கிடைக்கப்பெறும். இந்த எண்ணையும் பாஸ்வேர்டையும் மறக்காமல் குறித்து வைத்து கொள்ளவும்.

இந்த பதிவானது 5 வருடங்கள் செல்லுபடியாகும். இனி நீங்கள் தமிழக தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் பொது உங்களது நிலையான எண்ணை கொண்டு எளிமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்திடலாம். அதோடு ஒவ்வொரு முறையும் நீங்கள் விண்ணப்பதுக்கான கட்டணத்தை செலுத்த தேவையில்லை. ஆனால் ஒவ்வொருமுறையும் அந்ததந்த தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தித்தான் ஆக வேண்டும்.

TNPSC தேர்வுக்கான விண்ணப்பத்தை நிரப்புவது எப்படி :

மேற்குறிப்பிட்ட விண்ணப்பத்தை போலவேதான் இந்த விண்ணப்பத்தையும் நிரப்ப வேண்டும். விண்ணப்பத்தின் ஆரம்பத்திலேயே one time registration செய்திருக்கிறீர்களா என்று கேட்கும் ஆம் என்று டிக் செய்யவும். அதன் பிறகு மேற்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்தது போல் உங்களது விபரங்களை ஒவ்வொன்றாக இதில் பூர்த்தி செய்யவும். அந்த விண்ணப்பத்தில் கேட்டிருந்த விபரங்களை விட இங்கே நிறைய விபரங்களை பூர்த்தி செய்யவேண்டும். உதாரணமாக நீங்கள் அரசியல் கட்சியை சேர்ந்து ஏதேனும் போராட்டத்தில் கலந்து கொண்டீர்களா? உங்கள் மீது ஏதேனும் வழக்குள்ளதா? இந்த தேர்வை எத்தனையாவது முறை எழுதுகிறீர்கள் போன்ற விபரங்களும் கேட்கப்பட்டிருக்கும். நீங்கள் இரண்டாவது முறையாக இந்த தேர்வை எழுதுகிறீர்கள் என்றால் உங்களது முந்தைய தேர்வின் பதிவெண்ணும் தேர்வு எழுதிய வருடமும் குறிப்பிடப் படவேண்டும். 

ஏற்கனவே one time registration நீங்கள் செய்திருப்பதால் இந்த விண்ணப்பத்தை நிரப்புவதில் அதிக சிரமம் இருக்காது. அனைத்தையும் சரியாக நிரப்பி  submit செய்யவும்.

பிறகு தேர்வாணையம் குறிப்பிடும் நாளில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு தேர்வுக்கு செல்லலாம். அவ்வளவுதான்.

Friday, 29 June 2012

டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி?


டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான முதற்படியே எல்எல்ஆர் என்று கூறப்படும் பழகுனர் உரிமம் பெறுவதுதான்

பழகுனர் உரிமத்துக்கு (எல்எல்ஆர்) விண்ணப்பிப்பது எப்படி?

எல்எல்ஆர் பெறுவதற்கு விண்ணப்பதாரர் 16 முதல் 18 வயதுடையோர் கியர் இல்லாத 50 சிசிக்கும் குறைவான திறன் கொண்ட மொபட் ஓட்டுவதற்கு மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

18 வயதுக்கு மேற்பட்டோர் கியர் கொண்ட அனைத்து இருசக்கர மற்றும் இலகு ரக நான்கு சக்கர வாகனங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதைத்தொடர்ந்து, 20 வயது பூர்த்தியடைந்தோர் கனரக வாகனங்களுக்கான லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க முடியும்.

Thursday, 28 June 2012

பான் கார்டின் பயன் என்ன.... 
                        அதை பெறுவது எப்படி?  

PAN - Permanent Account Number
  • பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. 
  • இதை வழங்குவது வருமான வரித்துறை. 
  • இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம்.
  • சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான் கார்ட் உதவுகிறது.

பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் AFZPK7190K என்று வைத்துக் கொள்வோம்.

முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.

“P” என்றால் அது தனிப்பட்ட நபருடையது. “F” என்றால் Firm, “C” என்றால் Company, “T” என்றால் டிரஸ்ட் (அறக்கட்டளையுடையது) என்று பொருள்.

5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும்.

அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.

பான் கார்ட் வைத்திருப்பது கட்டாயமா?

ஆமாம். பான் கார்ட் மிக மிக அவசியமானதே. 
வங்கியில் பணப் பரிமாற்றத்துக்கும் (ரூ.50,000க்கு மேல் பண பரிமாற்றம் செய்தால் கண்டிப்பாக பான் எண் குறிப்பிட வேண்டும்), வருமான வரித்துறைக்கு நமது கணக்குகளை சமர்பிக்கவும் இது கட்டாயமாகும்.

எப்படி இதைப் பெறுவது?

வருமான வரித்துறையின் Form 49 விண்ணப்பத்தில் இதைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தை www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.com ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.

உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற
https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையத்தளத்தை நாடலாம்.

இந்திய குடிமகன்கள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.

1. பள்ளி டிசி
2. பிளஸ் டூ சான்றிதழ்
3. கல்லூரி் சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு விவரம்
5. கிரடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்
6. வாட்டர் பில்
7. ரேசன் கார்ட்
8. வீட்டு வரி ரசீது
9. பாஸ்போர்ட்
10. வாக்காளர் அட்டை
11. ஓட்டுனர் உரிமம்
12. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்

அதே போல விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.

1. மின் கட்டண ரசீது
2. தொலைபேசி கட்டண ரசீது
3. வங்கிக் கணக்கு விவரம்
4. வீட்டு வாடகை ரசீது
5. பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்
6. பாஸ்போர்ட்
7. வாக்காளர் அடையாள அட்டை
8. வீட்டு வரி ரசீது
9. ஓட்டுனர் உரிமம்
10. ரேசன் கார்டு
11. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்

விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.

Monday, 25 June 2012

 புதிய பாஸ்போர்ட் அல்லது ரெனிவல் செய்வது எப்படி?


முதலில் ஆன் லைனில்  https://passport.gov.in/pms/Information.jsp Continue என்பதை கிளிக் செய்து  Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும். அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும். 

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்  
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)  
First Name: உங்களது பெயர் உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து  
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்  
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்  
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)  
Place of Birth: பிறந்த ஊர்  
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்  
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்  
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை) Height (cms): உயரம்  
Present Address: தற்போதைய முகவரி  
Permanent Address: நிரந்தர முகவரி  
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்  
Mobile No : மொபையில் எண்  
Email Address: இமெயில் முகவரி  
Marital Status: திருமணமான தகவல் Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர் Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்.

 உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்  
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்  
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்  
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள் [] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும் அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம். பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம். 

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
  • ரேசன் கார்டு
  • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
  • துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
  • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
  • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
  • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள்
  • 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
  • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
  • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள்.