டி.என்.பி.எஸ்.சி (TNPSC) தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தற்போது டி.என்.பி.எஸ்.சி. விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அது எப்படி என்பதை பார்ப்போம்.
TNPSC இணையத்தில் பதிவதற்கு முன்பு நாம் தயாராக வைத்திருக்க வேண்டியவை :
- சமீபத்திய புகைப்படம் மற்றும் கையெழுத்தினை ஸ்கேன் செய்து சீடியிலோ அல்லது பெண் டிரைவ்விலோ வைத்திருக்கவும். புகைப்படம் 50kb (3.5 cm x 4.5 cm, 20 kb –50 kb)அளவுக்கு மிகாமலும் கையெழுத்து 20kb (3.5 cm x 1.5 cm, 10 kb –20 kb)அளவுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.
- சாதிச் சான்றிதழ் மற்றும் மற்ற படிப்புகளின் மதிப்பெண் பட்டியலை மறக்காமல் கையில் வைத்துக் கொள்ளவும்.
- மின்னஞ்சல் (இமெயில்) முகவரி மற்றும் செல்போன் நம்பர் அவசியம் தேவை.
இப்போது TNPSC யின் இனணய தளமான http://tnpscexams.net என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.
அங்கே இடது புறத்தில் One Time Registration என்று குறிப்பிடப்பட்டுள்ளதை க்ளிக் செய்யவும்.
TNPSC One Time Registration செய்வது எப்படி?
முகப்பு பக்கத்தில் காணப்படும் One Time Registration பொத்தானை அழுத்தவும். உங்களுக்கு பதிவு செய்ய வேண்டிய விண்ணப்பத்தைக் காட்டும்.
அப்படிவத்தில் பெயர், தந்தை பெயர், தாயார் பெயர், கணவர் அல்லது மனைவி பெயர், பிறந்த இடம், தந்தையார் பிறந்த இடம், தாய்மொழி, இனம், மதம், சாதி, சாதி உட்பிரிவு, சாதி சான்றிதழின் எண், சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி, யார் வழங்கினார்கள் என்ற விவரம், எந்த வருடம் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு படித்தீர்கள் என்ற விபரங்களும் கேட்கப்பட்டு இருக்கும்.
அவற்றையும் பொறுமையாக பிழை இன்றி பதிவு செய்யவும். பதிவு செய்து அதன் வாயிலாக கிடைக்கும் சளானை பூர்த்தி செய்து அருகாமையில் உள்ள அஞ்சலகத்திலோ, இந்தியன் வங்கி கிளைகளிலோ அல்லது இணைய வழி வங்கி சேவை (டெபிட் கார்டு) மூலமாகவோ பதிவுக்கான தொகையினை குறித்த நேரத்திற்குள் செலுத்திட வேண்டும்.
பதிவு செய்த உடன் உங்களது மின்னஞ்சல் மற்றும் அலைபேசிக்கு உங்களுக்கான ரிஜிஸ்டர் எண் மற்றும் பாஸ்வேர்ட் கிடைக்கப்பெறும். இந்த எண்ணையும் பாஸ்வேர்டையும் மறக்காமல் குறித்து வைத்து கொள்ளவும்.
இந்த பதிவானது 5 வருடங்கள் செல்லுபடியாகும். இனி நீங்கள் தமிழக தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் பொது உங்களது நிலையான எண்ணை கொண்டு எளிமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்திடலாம். அதோடு ஒவ்வொரு முறையும் நீங்கள் விண்ணப்பதுக்கான கட்டணத்தை செலுத்த தேவையில்லை. ஆனால் ஒவ்வொருமுறையும் அந்ததந்த தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தித்தான் ஆக வேண்டும்.
TNPSC தேர்வுக்கான விண்ணப்பத்தை நிரப்புவது எப்படி :
மேற்குறிப்பிட்ட விண்ணப்பத்தை போலவேதான் இந்த விண்ணப்பத்தையும் நிரப்ப வேண்டும். விண்ணப்பத்தின் ஆரம்பத்திலேயே one time registration செய்திருக்கிறீர்களா என்று கேட்கும் ஆம் என்று டிக் செய்யவும். அதன் பிறகு மேற்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்தது போல் உங்களது விபரங்களை ஒவ்வொன்றாக இதில் பூர்த்தி செய்யவும். அந்த விண்ணப்பத்தில் கேட்டிருந்த விபரங்களை விட இங்கே நிறைய விபரங்களை பூர்த்தி செய்யவேண்டும். உதாரணமாக நீங்கள் அரசியல் கட்சியை சேர்ந்து ஏதேனும் போராட்டத்தில் கலந்து கொண்டீர்களா? உங்கள் மீது ஏதேனும் வழக்குள்ளதா? இந்த தேர்வை எத்தனையாவது முறை எழுதுகிறீர்கள் போன்ற விபரங்களும் கேட்கப்பட்டிருக்கும். நீங்கள் இரண்டாவது முறையாக இந்த தேர்வை எழுதுகிறீர்கள் என்றால் உங்களது முந்தைய தேர்வின் பதிவெண்ணும் தேர்வு எழுதிய வருடமும் குறிப்பிடப் படவேண்டும்.
ஏற்கனவே one time registration நீங்கள் செய்திருப்பதால் இந்த விண்ணப்பத்தை நிரப்புவதில் அதிக சிரமம் இருக்காது. அனைத்தையும் சரியாக நிரப்பி submit செய்யவும்.
பிறகு தேர்வாணையம் குறிப்பிடும் நாளில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு தேர்வுக்கு செல்லலாம். அவ்வளவுதான்.