Blogger news

Monday 16 January 2017

#அஞ்சி_அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
#அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோலைக்கு இல்லம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
நீ கொண்டு வந்தது என்னடா, மீசை முறுக்கு
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

Tuesday 29 July 2014

இருக்கு ஆனா இல்ல ... Pen Drive Virus பிரச்சனைக்கு தீர்வு



இருக்கு ஆனா இல்ல ...
 Pen Drive Virus பிரச்சனைக்கு தீர்வு
 



நாம் அன்றாடம் பல கணினிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக Pen Drive  களை பயன்படுத்துகின்றோம்.

இதனால் Virus, Mal ware கள் உங்களது Pen Drive ல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உங்களது முக்கியமான File களை அழித்து விடுவதுடன், folder shortcuts களை உருவாக்கிவிடும்.


மேலும் Pen Driveல் GB அளவு அதிகமாக பயன்படுத்திருப்பதாக தெரியும்.. ஆனால் File இருப்பதை காட்டாது (இருக்கு ஆனா இல்ல)


சில சமயங்களில் எப்படி உங்களது file களை மீள பெறுவது என தெரியாமல் இருக்கும். பின்வரும் வழிமுறையை பின்பற்றி இந்த பிரச்சனையை சரிசெய்து கொள்ளுங்கள்.

முதலில் Pen Drive கம்ப்யூட்டரில் இணைத்து My Computer சென்று Pen Drive ன் Drive Letter தெரிந்து கொள்ளவும்.


பின்னர் Run சென்று அங்கே cmd என Type  செய்யுங்கள்.

பின்னர் திறக்கும் Command Prompt திரையில் (உ.ம் Pen Drive  F:\ என்று வைத்துக்கொள்வோம்). attrib -h -r -s /s /d f:*.* என type செய்யுங்கள்.


(மேலே காணப்படும் f என்பதற்கு பதிலாக உங்களது சரியான Pen Drive ன் Drive Letter-ஐ கொடுங்கள் (இதை உங்களது My Computer ல் கிளிக் செய்து பார்க்கலாம்).


இப்பொழுது Pen Drive ல் உள்ள அனைத்து Folder மற்றம் Fileகள் உங்களுக்கு தெரியும்.


இனி உங்களது Pen Drive ல் சென்று அங்கு உள்ள தேவையற்ற Shortcuts களை அழித்து விடுங்கள்.


இவ்வாறு செய்தால் உங்களது Pen Drive ன் Hidden மற்றும் Folder Shortcut சிக்கலை சரிசெய்து விடலாம்.


மற்றொரு பதிவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்... நன்றி.. வணக்கம்.... அன்புடன்.. முத்துக்குமரன். செ.

எந்தவொரு மென்பொருளுமின்றி தமிழ் மற்றும் பிறமொழிகளில் தட்டச்சு செய்வது மிக எளிது.... எப்படி?


எந்தவொரு மென்பொருளுமின்றி தமிழ் மற்றும் பிறமொழிகளில் தட்டச்சு செய்வது மிக எளிது.... எப்படி?

முதலில் Windows XP யில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.... தாங்கள் கணிப்பொறி வாங்கும் பொழுதே அனைத்து நிறுவனமும் OS (Windows) Install செய்யும் போது Supplemental Language Support … சேர்த்திருப்பார்கள் அப்படியில்லையெனில்.... பின்வருமாறு செய்யவும்...
Insert your Windows XP CD.
·        Go to Control Panel    Select Regional and Language Options  Select Languages.
·        Install (ok)
·     Select Details    Select Add Input Language  Select Choose your language
(Ex. Tamil Language)  
Ok.
 
Windows 7 ல் எவ்வாறு செயல்படுத்துவது என்பதை பார்ப்போம்

·     Go to Control Panel → Select Region and Language Select Keyboards and Languages.
·     Change keyboards.


 ·      Select Add    Select Choose your language (Ex. Tamil Language) →  Ok.
 




மேலே உள்ள படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு, ஹிந்தி, உருது இணைந்துள்ளேன்... (இது போன்று உங்களுக்கு தேவையான அனைத்து மொழிகளையும் இணைக்கலாம்....) சரி... அடுத்த என்ன செய்வது என்று பார்ப்போம்....


நீங்கள் மொழிகளை இணைத்தவுடன் Taskbarல் கீழுள்ளவாறு Language Bar (படம் 1) தோன்றும்.. நாம் எந்த மொழியில் அடிக்க விரும்புகிறோமோ அந்த மொழியை தேர்வு செய்து (படம் 2) தட்டச்சு செய்ய தொடங்கலாம்...

    படம் 1                 படம் 2
 


தமிழில் தட்டச்சு செய்ய TA என்பதை தேர்வு செய்யவும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய EN செய்யவும்....


சரி விசைப்பலகை மற்றும் எழுத்துக்களின் அமைப்பு எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை பார்ப்போம்..




 
தற்போது கற்றது கையளவு என்பதை எப்படி தட்டச்சு செய்வது என்பதை பார்ப்போம்...

k = , J + d = ற், J = ற, l+g=து, k+w = கை, /=, N=, b+g = வு

(உ.ம் க+அ = க், க+ஆ=கா, க+இ=கி, க+ஈ=கீ, க+உ=கு, க+ஊ=கூ)

இது UNICODE முறையில் செயல்படும். நாம் இணையத்தில் UNICODE பயன்படுத்திதான் தட்டச்சு செய்கிறோம்... இந்த முறையை MS OFFICE, ADOBE PHOTOSHOP (Latest Version) மற்றும் அனைத்து மென்பொருட்களிலும் பயன்படுத்தலாம்... நீங்கள் கேட்கலாம் தமிழில் பயன்படுத்த Latha என்ற எழுத்துரு மட்டும்தான் இருக்கிறதா... என்றால் இல்லை பல டிசைன் எழுத்துருக்கள் இருக்கிறது... உ.ம். செந்தமிழ் எழுத்துருவை போல் UNICODEல் பல டிசைன் எழுத்துருக்கள் உள்ளன...


சரி நண்பர்களே... இந்த பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.... மற்றொரு பதிவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்... நன்றி.. வணக்கம்.... அன்புடன்.. முத்துக்குமரன். செ.