Blogger news

Tuesday, 29 July 2014

இருக்கு ஆனா இல்ல ... Pen Drive Virus பிரச்சனைக்கு தீர்வு



இருக்கு ஆனா இல்ல ...
 Pen Drive Virus பிரச்சனைக்கு தீர்வு
 



நாம் அன்றாடம் பல கணினிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக Pen Drive  களை பயன்படுத்துகின்றோம்.

இதனால் Virus, Mal ware கள் உங்களது Pen Drive ல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உங்களது முக்கியமான File களை அழித்து விடுவதுடன், folder shortcuts களை உருவாக்கிவிடும்.


மேலும் Pen Driveல் GB அளவு அதிகமாக பயன்படுத்திருப்பதாக தெரியும்.. ஆனால் File இருப்பதை காட்டாது (இருக்கு ஆனா இல்ல)


சில சமயங்களில் எப்படி உங்களது file களை மீள பெறுவது என தெரியாமல் இருக்கும். பின்வரும் வழிமுறையை பின்பற்றி இந்த பிரச்சனையை சரிசெய்து கொள்ளுங்கள்.

முதலில் Pen Drive கம்ப்யூட்டரில் இணைத்து My Computer சென்று Pen Drive ன் Drive Letter தெரிந்து கொள்ளவும்.


பின்னர் Run சென்று அங்கே cmd என Type  செய்யுங்கள்.

பின்னர் திறக்கும் Command Prompt திரையில் (உ.ம் Pen Drive  F:\ என்று வைத்துக்கொள்வோம்). attrib -h -r -s /s /d f:*.* என type செய்யுங்கள்.


(மேலே காணப்படும் f என்பதற்கு பதிலாக உங்களது சரியான Pen Drive ன் Drive Letter-ஐ கொடுங்கள் (இதை உங்களது My Computer ல் கிளிக் செய்து பார்க்கலாம்).


இப்பொழுது Pen Drive ல் உள்ள அனைத்து Folder மற்றம் Fileகள் உங்களுக்கு தெரியும்.


இனி உங்களது Pen Drive ல் சென்று அங்கு உள்ள தேவையற்ற Shortcuts களை அழித்து விடுங்கள்.


இவ்வாறு செய்தால் உங்களது Pen Drive ன் Hidden மற்றும் Folder Shortcut சிக்கலை சரிசெய்து விடலாம்.


மற்றொரு பதிவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்... நன்றி.. வணக்கம்.... அன்புடன்.. முத்துக்குமரன். செ.

No comments:

Post a Comment